காதலிக்க மறுத்த சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம்: தலைமறைவான இளைஞரை கைது செய்த போலீசார் - கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

கோவையில், காதலை ஏற்க மறுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொன்று, தலைமறைவாக இருந்த ரதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2020-07-20 13:52 GMT
கோவை மாவட்டம், ஆறுமுககண்டனூர் பகுதியை சேர்ந்த ரதீஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 17 ஆம் தேதி,   ரதீஷ், தந்தையுடன் வெளியே வந்த சிறுமியை கத்தியால் குத்தி தப்பியோடினார். காயமடைந்த சிறுமி மற்றும் அவரது தந்தை சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி 18 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ரதீஷை, போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரியை கண்டுபிடிக்க சிறப்பாக செயல்பட்ட பேரூர் காவல் ஆய்வாளர் சுகவனம் மற்றும் குழுவினரை காவல் கண்காணிப்பாளர் அருளரசு வெகுவாக பாராட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்