பொறியியல், பட்டப் படிப்பு இறுதி பருவ தேர்வை ரத்து செய்ய கோரிய மனு - 2 வாரங்களில் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பொறியியல், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், பொறியியல், பட்டப் படிப்புகளின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரித்தது. விசாரணையின் முடிவில், இந்த மனுவுக்கு, இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.