மாணவனை கையால் மலம் அள்ள வைத்த கொடுமை - தருமபுரி அருகே தலித் சிறுவனுக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்

தருமபுரி அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவனை கையால் மலம் அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2020-07-18 09:02 GMT
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடானம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் இயற்கை உபாதைக்காக அந்த பகுதியில் உள்ள புதருக்குள் சென்றுள்ளார். இதைப் பார்த்த அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் என்பவர், சிறுவனின் சாதிப்பெயரை சொல்லி திட்டியதோடு, அவரை கையால் மலத்தை அள்ள வைத்து வேறு இடத்தில் போடுமாறு சொல்லியுள்ளார். மேலும் அந்த சிறுவனை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன சிறுவன், தன் பெற்றோரிடம் நடந்ததை கூறவே, அவர்கள் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மீது தீண்டாமை குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்