நெல்லை - மேலும் 93 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2020-07-18 06:40 GMT
நெல்லை மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 2 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரத்து 142 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆயிரத்து 192 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில்11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புதுக்கோட்டை- மேலும் 40 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேலும் 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 947 ஆக உயர்ந்துள்ளது. 506 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 430 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

மதுரை - ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேலும் 245 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 8 ஆயிரத்து 103 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 677 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கொரோனாவிற்கு 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் - மேலும் 130 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 
விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 169 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ள நிலையில், 704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

தேனி - மேலும் 159 பேருக்கு கொரோனா 

தேனி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும்159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 2 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து ஒன்பது பேர் குணமடைந்து வீடு திரும்பி  உள்ள நிலையில்,  ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை தேனி மாவட்டத்தில் 42 ஆக அதிகரித்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்