சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிதி உதவி - அரசு சார்பில் மூன்றாவது முறையாக அளிக்கப்படுகிறது

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு மூன்றாவது முறையாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது.;

Update: 2020-07-17 10:01 GMT
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு மூன்றாவது முறையாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் திரைப்பட தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த 9 ஆயிரத்து 882 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 98 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  மார்ச் மாதத்தில் இருந்து திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில்,  தற்போதைய  அறிவிப்பின் படி மூன்றாவது முறையாக தமிழக அரசு நிதி உதவி அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்