12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது - ஒருமணி நேரம் போராடி பிடித்து சென்ற தீயணைப்பு துறையினர்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அருகே சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துள்ளனர்.;

Update: 2020-07-17 04:03 GMT
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அருகே சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துள்ளனர். முன்னதாக, குடியிருப்புகளுக்கு இடையே சுற்றித்திரிந்த தெருநாயை விழுங்க முயற்சித்த மலைப்பாம்பு கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர், தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப்பாம்பை பிடித்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்