கொரோனா பரிசோதனைக்கு செல்ல லாரி திருட்டு - வாலிபர் சிறையில் அடைப்பு

திருவாரூரில் கொரோனா பரிசோதனைக்கு செல்ல , வாலிபர் ஒருவர் லாரியை திருடிச் சென்றுள்ளார்.;

Update: 2020-07-16 02:36 GMT
ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான லாரி , காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்தனர், லாரி நிறுத்தப்பட்டிருந்த வேதை சாலையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் , புளியங்குடியை சேர்ந்த அசோக் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தான் சென்னையில் இருந்து பல வாகனங்களில் பயணித்து திருத்துறைபூண்டிக்கு வந்ததாகவும் , கொரோனா பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு வரவேண்டாம் என்று உறவினர்கள் கூறியதால் அவசரத்தில் செய்வதறியாது , லாரியை திருடி திருவாரூர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறினார். பின்னர் போலீசார் அவரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்