"சென்னையில் கொரோனா குணமடைந்தோர் எண்ணிக்கை 77% உயர்வு" - சுகாதாரத்துறை தகவல்

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 77 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2020-07-14 12:59 GMT
சென்னையில் தற்போது வரை, தொற்று பாதிக்கப்பட்டவபர்களின் மொத்த எண்ணிக்கை, 78 ஆயிரத்து 573ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது. குணம் அடைந்து இல்லம் திரும்புவோரின் எண்ணிக்கையும், சமீப நாட்களாக  அதிகரித்து வருகிறது.அந்த வகையில் இதுவரை 60 ஆயிரத்து 694  பேர் குணம் அடைந்து இல்லம் திரும்பி உள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 77 சதவீதம் பேர் குணம் அடைந்து உள்ளனர்.. கொரோனா தொற்றால் சென்னையில், இதுவரை ஆயிரத்து 277  பேர் உயிரிழந்துள்ளனர்.இது மொத்த பாதிப்பில் 1.6சதவீதம் ஆகும்.. 16  ஆயிரத்து 601  பேர் மட்டுமே, அதாவது 21 சதவீதம் பேர் மட்டுமே  மருத்துவ சிகிச்சையில்  உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்