"தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்ப பெறுக" - மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை
தேர்தல் நடத்துவது தொடர்பான சட்டத்தில் பாஜக அரசு திருத்தங்களை கொண்டு வந்ததற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
தேர்தல் நடத்துவது தொடர்பான சட்டத்தில் பாஜக அரசு திருத்தங்களை கொண்டு வந்ததற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் விதிமுறைகளில் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.