இருட்டுக் கடை" உரிமையாளர் மறைவிற்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
அல்வா இனிப்பிற்கு பெயர்பெற்ற திருநெல்வேலி "இருட்டுக் கடை" உரிமையாளர் ஹரிசிங் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.;
அல்வா இனிப்பிற்கு பெயர்பெற்ற திருநெல்வேலி "இருட்டுக் கடை" உரிமையாளர் ஹரிசிங் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த அச்சமோ, மன உளைச்சலோ ஏற்பட்டால் பொதுமக்கள் தயங்காமல், அரசு உதவி எண் 104 ஐ தொடர்புகொண்டு மனநல ஆலோசனை பெற்றுகொள்ளலாம் என தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார். சமீப காலங்களில் பலர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்வதாக வரும் செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.