"மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்" - நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி கடிதம்

வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலிக்க வேண்டும் என, திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2020-06-25 12:25 GMT
வங்கிகளில், மகளிர் சுய உதவிக் குழுவினர்  பெற்ற கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலிக்க வேண்டும் என, திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கடந்த 22 ஆம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வங்கி கடன் பெற்ற, மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்க கட்டாயப்படுத்துவதை தவிர்க்க உரிய  நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்