ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த இளைஞர்கள்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முகநூல் மூலம் இணைந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆதரவற்றோருக்கு அறக்கட்டளை மூலமாக உதவி செய்து வருகின்றனர்.;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முகநூல் மூலம் இணைந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆதரவற்றோருக்கு அறக்கட்டளை மூலமாக உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், உறவினர்களால் கைவிடப்பட்ட சிறுகுடி சேர்ந்த சின்னம்மாள் என்ற பாட்டி சேதமடைந்த வீட்டில் வசித்து வருவதை கண்ட இளைஞர்கள், அந்த பாட்டிக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். அதனை நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி திறந்து வைத்தார்.