சூரிய கிரகணம் - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நடை அடைப்பு

நாளை சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை சாற்றப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update: 2020-06-20 07:44 GMT
நாளை சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை சாற்றப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களின் அனுமதியின்றி கோயில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்று வரும் நிலையில், நாளை
காலை 7 மணிக்குள் அனைத்து பூஜைகளை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சூரிய கிரகணம் நிறைவு பெற்ற பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு ,உச்சிக்கால பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்