5 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிவு - காசி, டெய்சன் ஜினோ நீதிபதி முன் ஆஜர்
நாகர்கோவில் காசி மற்றும் அவனது நண்பன் ஆகியோருக்கு ஐந்து நாட்கள் சிபிசிஐடி காவல் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.;
சிபிசிஐடி காவல் முடிந்ததை தொடர்ந்து காசி மற்றும் டெய்சன் ஜினோ இருவருக்கும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இருவரும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே காசி மற்றும் அவனது நண்பனை அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்ற போலிஸ், விசாரணை நடத்தினர். காசியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெமரி கார்டு, மொபைல் போன் மற்றும் காசிக்கு பல பெண்களால் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.