வெளிநாடுகளில் சிக்கிதவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.;

Update: 2020-06-19 11:30 GMT
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்களின் விவரங்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றி ஜூன் 23ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்