கடலூர் மாவட்டத்தில் வாடகைக்கு விடப்படும் அரசு பேருந்துகள்

கடலூர் மாவட்டத்தில் 50 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், மீதமுள்ள அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.;

Update: 2020-06-19 10:03 GMT
கடலூர் மாவட்டத்தில் 50 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், மீதமுள்ள அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. தொழிற்சாலைப் பணியாளர்கள், நிறுவன பணியாளர்கள், பெரிய கடை பணியாளர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மண்டலங்களுக்கு இடையே குழுவாக பயணிப்பவர்கள் இ-பாஸ் வைத்திருந்தால், அவர்களுக்கும் பேருந்து வாடகைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்காயிரம் ரூபாய் இதற்காக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்