"வீரர்களின் உயிர்த் தியாகத்திற்கு ஈடு கிடையாது" - உதயநிதி ஸ்டாலின் டுவிட்
லடாக் எல்லையில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்திற்கு ஈடே கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
லடாக் எல்லையில் நடந்த மோதலில், வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்திற்கு ஈடே கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் வீரர்களின் உயிர் தியாகத்தை பாஜகவினர் தங்களின் தியாகம் போல் பேசுவது அந்த வீரர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தேசமே ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றி, அவர்களின் பின்னால் நிற்பதாகவும், பாஜகவின் பின்னால் அல்ல என்றும் தமது டுவிட்டர் பதிவில், உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.