சென்னையில் இன்று இதுவரை 28 பேர் கொரோனாவுக்கு பலி

சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளரின் பேரன் இன்று காலை உயிரிழந்தார்.;

Update: 2020-06-19 09:13 GMT
சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளரின் பேரன் இன்று காலை உயிரிழந்தார். இதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 9பேர் உயிரிழந்த நிலையில், சென்னை கேஎம்சி மருத்துவமனையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்