ஆன்லைன் வகுப்புகள் - விதிமுறைகள் வகுப்பு? விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

தமிழகத்தில் ஆன்-லைன் வழியிலான வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.;

Update: 2020-06-18 11:18 GMT
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஆன்-லைன் வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் வகுப்பு நடத்த முடியாத சூழலில், தனியார் பள்ளிகள் மட்டும் இது போன்று செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழலையர் வகுப்புகளுக்கு கூட ஆன்-லைன் வழி வகுப்பு நடத்துவது சரியல்ல என்று பெற்றோர், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ஆன்-லைன் வழி வகுப்பு விவகாரத்தில் அரசு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது என்றும், விரைவில் இதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளிப்பார் என்றும் கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்படி எந்த வகுப்பு வரை ஆன்-லைன் வழி  எடுக்கலாம், எந்த வகுப்புகளுக்கு எடுக்கக்கூடாது , ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் ஆன்-லைன் வகுப்பு எடுக்கலாம் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் அரசாணையாக  வெளியிட உள்ளதாக தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்