12வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பெட்ரோல் விலை - ரூ.81.32, டீசல் விலை - ரூ.74.23
தொடர்ந்து 12வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது.;
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 46 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 32 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 54 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 23 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த 12 நாட்களில், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 78 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 1 காசுகளும் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.