நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன விழா - மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2020-06-17 17:27 GMT
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எந்த ஒரு தளர்வும் கொடுக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் தெளிவாக கூறி விட்டதாக தெரிகிறது. மேலும் தீட்சிதர்கள் மட்டும் கோவிலுக்குள் விழாவை நடத்திக் கொள்ளலாம் என்றும்,  பக்தர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் பதில் அளிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்