"முழு ஊரடங்கு கடுமையாக இருக்கும்" - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

கொரோனா எனும் சங்கிலித் தொடர் சமூக பரவலாவதைத தடுக்கவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.;

Update: 2020-06-17 16:54 GMT
கொரோனா எனும் சங்கிலித் தொடர் சமூக பரவலாவதைத தடுக்கவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முழு ஊரடங்கு கடுமையாக இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்