மாநிலங்கள் இடையே போக்குவரத்து - அரசு விளக்கம்

முழு ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தளர்வு குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.;

Update: 2020-06-17 09:07 GMT
முழு ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தளர்வு குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு இடையே, தொழில் ரீதியிலான போக்குவரத்துக்கு தடை இல்லை என அதில் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பினால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருவோருக்கான தடை உத்தரவு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்