"தீயில் கருகிய 15 வயது பள்ளி மாணவி" - குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் பாகாயம் அருகே குளிக்கும் போது எடுத்த வீடியோவை வைத்து பாலியல் உறவுக்கு அழைத்ததால், தீக்குளித்த 15 வயது சிறுமி உயிரிழந்தார்.;

Update: 2020-06-17 03:25 GMT
துத்திப்பட்டு கிராமத்தில்15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர், அதை வைத்து  ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சம்பவத்தை தமது சித்தியிடம் கூறியுள்ளார். அவர் காவல் நிலையம் செல்லலாம் என கூறிய நிலையில், வீடியோ எடுத்தவர்கள் அழைத்த இடத்துக்கு சென்ற மாணவி, அவனிடம் இருந்த செல்போனை பறித்து வீடியோக்களை அழித்து உள்ளார். அதில், தமது பாட்டி குளிக்கும் வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ந்த நேரத்தில், தலையில் கல்லை போட்டுவிட்டு அவன் தப்பி ஓடியுள்ளான்.  இதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்த மாணவி, கடந்த13ஆம் தேதி மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். மருத்துவ மனையில் இவ்வாறு வாக்கு மூலம் அளித்த அவர், 16ஆம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி ஆகிய மூவரையும் கைது போலீசார் சிறையில் அடைத்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்