கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை ஆட்சியர்கள் நியமனம்
கடலூர் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.;
கடலூர் மாவட்டத்தில் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அரசு விதிமுறைகளை மீறி இ-பாஸ் பெறாமல் வருபவர்களால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளையும் கணக்கில் கொண்டு ஐந்து வார்டுக்கு ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.