கொரோனாவிற்கு 28 வயது இளைஞர் உயிரிழப்பு - கோவை மாவட்டத்தில் உயிரிழப்பு 2ஆக உயர்ந்தது

சென்னையில் இருந்து கோவை சென்ற 28 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2020-06-15 10:42 GMT
சென்னையில் இருந்து கோவை சென்ற 28 வயது இளைஞர் ஒருவர், கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஆர்.ஜி புதூர் பகுதியை சேர்ந்த அந்த இளைஞர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரம் கோவை வந்த அவருக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து வெண்டிலெட்டர் மூலம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்