தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம் - சி.பா.ஆதித்தனாருக்கு திருமாவளவன் புகழாரம்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி ஆதித்தனாருக்கு வீரவணக்கம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-05-24 11:20 GMT
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, ஆதித்தனாருக்கு வீரவணக்கம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், சாதியை உதறிவிட்டு, மதத்தை ஒதுக்கிவிட்டு, உறவுத் தமிழராய் ஒருங்கிணைவோம் என அரை நூற்றாண்டுக்கு முன்பே அறைகூவல் விடுத்தவர் அருந்தமிழர் அய்யா என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ஆதித்தனாரின் நினைவு நாளானஇன்று சாதியத்தை வேரறுக்க, தமிழ் தேசியத்தை வென்றெடுக்க உறுதியேற்போம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்