நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றமா? - திடீரென வெளியான செய்தியால் பரபரப்பு
நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.;
சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி பணம் பறித்த நாகர்கோவில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட காசியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக திடீரென தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் காவல்துறை இந்த தகவலை மறுத்துள்ளது.