கொரோனா வார்டாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-05-22 03:49 GMT
குடிசை மாற்று வாரிய  அடுக்குமாடி குடியிருப்பை கொரோனா  வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூரில் அமைந்துள்ள கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் 816 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு ஒப்படைக்காமல், உள்ளது. இந்த நிலையில், அந்த குடியிருப்பை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்ற முயல்வதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வா  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே பொதுமக்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது எனவும், மனுவுக்கு பதிலளிக்குமாறும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது

\\
Tags:    

மேலும் செய்திகள்