உடுக்கை, பம்பை கலைஞர்கள் கோரிக்கை - ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டுகோள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பகுதியிலுள்ள வீரபத்திர சுவாமி கிராமிய உடுக்கை மற்றும் பம்பை கலைஞர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பகுதியிலுள்ள வீரபத்திர சுவாமி கிராமிய உடுக்கை மற்றும் பம்பை கலைஞர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டிவனம் தீயணைப்பு அலுவலர்கள் வளாகத்தில் வைத்து உடும்பை,பம்பை மற்றும் சிலம்பு அடித்து தங்கள் கலையை வெளிப்படுத்திய மக்கள், ஊரடங்கு உத்தரவால் கோயில் கொடைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.