மதுரை : தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பு காலத்தில் தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2020-05-21 10:25 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பு காலத்தில் தோட்டக்கலைத் துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார், மதுரை, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து, மல்லிகைப் பூக்களை வீணாக்காமல் அவற்றை நறுமண தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது என்றார். சோழவந்தான் பகுதிகளில் விளையும் தேங்காய்களை மகாராஷ்டிரா போன்ற மூன்று மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்