"ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பணிக்கு வர தேவையில்லை" - தமிழக கல்வித்துறை புதிய அறிவிப்பு

ஆசிரியர்கள் நாளை முதல் பணிக்கு வருமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வர வேண்டாம் என கல்வித் துறை அறிவித்துள்ளது.;

Update: 2020-05-20 03:04 GMT
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டதால், அனைத்து ஆசிரியர்களும் 21ம் தேதி முதல் பணிக்கு வரவேண்டுமென ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதுகலை ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்கள் யாரும் நாளை மே 21ம் தேதி முதல் பள்ளிக்கு வர  தேவை இல்லை என்றும், முதுகலை ஆசிரியர்களும் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வரும் 26-ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்