"வேலை நேரம் 12 மணி நேரமாக்குவதை கைவிட வேண்டும்" - பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பட்டம்

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, கோவையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2020-05-19 12:36 GMT
8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, கோவையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். முகக்கவசம் அணிந்தபடி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், வரும் 22 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்