அமைச்சர் நிகழ்ச்சியில் மீறப்பட்ட சமூக இடைவெளி - நிவாரண பொருட்கள் வாங்க முண்டியடித்த மக்கள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதிகளில் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.;
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதிகளில் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாதது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் வழங்கிய நிவாரணப் பொருட்களை வாங்க பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். அமைச்சர் முன்னிலையிலேயே சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் மீறப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.