தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வரும் 20-ந்தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-04-17 13:31 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர்கள் வரும் 20ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பாட நூல் கழக கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.   ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தால் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க ஏதுவாக இந்த உத்தரவை தமிழ்நாடு பாடநூல் கழகம் பிறப்பித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்