தஞ்சை : தரைப் பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் - 500 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கடந்தாங்குடி பகுதியில் உள்ள கண்ணாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் கரை உடைப்பு காரணமாக 500 ஏக்கர் நெற்பயிர்கள் ஆளுயர நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன.;
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கடந்தாங்குடி பகுதியில் உள்ள கண்ணாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் கரை உடைப்பு காரணமாக 500 ஏக்கர் நெற்பயிர்கள் ஆளுயர நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்பெடுத்துள்ளது. இதனால், கண்ணாற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரை உடைந்ததால், 500 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீர் மூழ்கி உள்ளன. மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.