பூசாரியை மாற்றக்கோரி படுகர் மக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், பூசாரியை மாற்றக்கோரி படுகர் இன மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-06-17 02:08 GMT
கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில், 19 கிராமங்களைச் சேர்ந்த படுகர் சமுதாய மக்களின் ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. படுகர் மக்களின் பொதுவான கோயிலான இங்கு, பூசாரியாக ஒரு குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வரும் 24 ஆம் தேதி தெவ்வ ஹப்பா பண்டிகை தொடங்க உள்ளது. அதனால், பண்டிகைக்கு முன்னதாக பூசாரியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை அடிப்படையில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தீர்வு ஏற்படவில்லை என்பதால் ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமையில் குன்னூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனால் குன்னுார் - கோத்தகிரி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்