தமிழக மருத்துவ பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - 5 பேர் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்

சேலம், தஞ்சை, தேனி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த முதல்வர் பணியிடங்களுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-12 17:22 GMT
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக டாக்டர் கே.திருமால் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் குமுதா லிங்கராஜும், தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் கே.ராஜேந்திரனும் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் பி.வசந்தியும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் எஸ்.பாலசுப்ரமணியமும் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்