54 விநாடிகளில் கை கட்டை விரல்களால் 75 தண்டால் எடுத்து கல்லூரி மாணவர் புதிய சாதனை

திருச்சியில் 54 விநாடிகளில் 2 கட்டை விரல்களால் 75 தண்டால்களை வேகமாக செய்து, கல்லூரி மாணவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

Update: 2018-09-12 10:24 GMT
தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கிஷோர்குமார் என்ற மாணவன், இந்த சாதனையை கல்லூரி மைதானத்தில்  பலரது முன்னிலையில் நிகழ்த்தினார். இதன் மூலம் இதற்கு முன், ஒரு நிமிடத்தில் 65 தண்டால்கள் செய்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்த சாதனை, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற பரிசீலிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்