முதுமலையில் 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி

முதுமலையில் 90 நாட்களாக 8 யானைகளுக்கு வழங்குபட்ட வந்த கும்கி பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது.

Update: 2018-09-11 20:59 GMT
முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் இருக்கும் 5 யானைகளுக்கும் கேராளாவில் இருந்து வந்த 3 யானைகளுக்கும்,  கடந்த 90 நாட்களாக கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

கும்கி யானை பயிற்சியாக மரம் இழுத்தல், ரோந்து பணி, காட்டுயானைகளை பிடிப்பது, அட்டகாசம் செய்யும் யானைகளை கூண்டில் அடைப்பது, வனக்கொள்ளையர்களை சுற்றி வளைப்பது உள்ளிட்ட பயிற்சிகள்  வழங்கப்பட்டது. இன்றுடன் கும்கி பயிற்சிகள் முடிவடைகிறது.
அதனைதொடர்ந்து 13-ஆம் தேதி நிறைவு விழாவும், விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெற உள்ளது. அதில் தமிழக கேரள வனத்துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்