அவகோடா பழ சீசன் தொடங்கியது : விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப் பகுதியில் அவகோடா (avocado) பழ சீசன் தொடங்கியுள்ளது.

Update: 2018-09-11 07:27 GMT
கொடைக்கானல் மலைப் பகுதியில் அவகோடா (avocado) பழ சீசன் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ 60 ரூபாயில் இருந்து, 100 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'வெண்ணெய் பழம்' என்றழைக்கப்படும் இந்த பழங்களை தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் மக்களும் வாங்கிச் செல்கின்றனர். விளைச்சல் குறைந்தபோதும் நல்ல விலை கிடைப்பதால் இவற்றை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்