நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை செயல்படும் - தமிழக அரசு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30ந் தேதி வரை தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-09-08 11:45 GMT
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 30ந் தேதி வரை தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவடை நடைபெற்று வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் செய்யும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று , மத்திய அரசிடம், முதலமைச்சர் பழனிசாமி கடிதம் மூலமும், துறை அமைச்சர் வாயிலாக நேரில் கோரிக்கை விடுத்ததாக, செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மத்திய அரசு,  இம்மாதம் 30ம் தேதி வரை நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட கால நீட்டிப்பு செய்து ஆணைகள் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது நெல்லை விற்பனை செய்து பயன் பெறவேண்டும் எனவும், செய்திக்குறிப்பில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்