கோயில்களில் இ-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது நடவடிக்கை - இந்து அறநிலையத்துறை உத்தரவு

கோயில்களில் பூஜை, பரிகாரம் செய்வதற்காக இ- சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகங்களுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-08 08:38 GMT
தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 648 கோயில்கள் உள்ளன.  அந்த கோயில்களில் அபிஷேகம், தங்கரதம், தங்கத்தொட்டில், உள்ளிட்டவைகளுக்காக இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் தனியார் இணையதளங்கள் மூலம் இ- சேவையில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில்,  சில தனியார் இணையதளங்கள் பக்தர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து பூஜை உள்ளிட்ட இ- சேவைகள் அனைத்தும் அந்தந்த கோயில் இணையதளங்கள் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கோயில்களுக்கு தொடர்பு இல்லாத தனியார் நிறுவனங்கள், இ- சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் காவல்துறையில் புகார் அளித்து குற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோயில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்