100 ஆண்டுகள் பழமையான நிலக்கரி நீராவி ரயில் என்ஜின்

குன்னூர் - மேட்டுப்பாளையம் தடத்தில் விரைவில் இயக்கம்

Update: 2018-09-07 21:19 GMT
எவ்வளவு முக்கியமான பணியில் இருந்தாலும் கூட, கண நேரமாவது கவனத்தை ஈர்க்கும் ஒரு சிலவற்றில் ரயிலுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும், பசுமையான மலை மீது ஊர்ந்து செல்லும் ஊட்டி மலை ரயிலின் பயணம் என்பது குதூகல அனுபவம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 46 கிலோ மீட்டம் தூரம் ஓடும் இந்த ரயிலில் பயணம் செய்யும்போது, இயற்கை காட்சிகளை மட்டுமல்லாமல், வன விலங்குகளையும் ரசிக்கலாம். இதனாலேயே, ஊட்டி வரும் பயணிகளின் விருப்பத்தில் முதல் இடம், மலை ரயிலுக்கு உண்டு. ஆசியாவிலேயே, பல் சக்கரம் மூலம் ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளமும் இது மட்டுமே. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான நிலக்கரி நீராவி என்ஜினைக் கொண்டு மலை ரயிலை இயக்கப்பட உள்ளது. மலை ரயில் பாதுகாப்பு இயக்கம், ரயில்வே இயக்குனர்கள் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் இணைந்து நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை தொடர்ந்து, குன்னூர் பணி மனைக்கு அந்த நீராவி என்ஜின் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே மிகவும் பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை கொண்டு, ஊட்டி மலை ரயில் விரைவில் வலம் வர இருப்பது, சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பான செய்தி என்றே கூறலாம்.
Tags:    

மேலும் செய்திகள்