விஜயபாஸ்கர் வீட்டில் 10 மணி நேரம் சிபிஐ சோதனை...
பதிவு: செப்டம்பர் 05, 2018, 10:45 PM
குட்கா முறைகேடு புகார் தொடர்பாக, சென்னை - கிரீன்வேஸ் சாலையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில், சிபிஐ அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.  காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சோதனை,  சுமார் 10 மணி நேரம் வரை நீடித்தது. ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரின் இல்லத்தில், 2 - வது முறையாக சோதனை நடத்தப்பட்டிருப்பது, இதுவே முதன்முறை ஆகும்.