சோபியா விவகாரம் - தமிழிசை கேள்வி

சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Update: 2018-09-05 16:59 GMT
சோபியா சர்ச்சை தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 ஆம் தேதி, தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவிற்கு எதிராக,  சோபியா முழக்கமிட்ட சம்பவத்தை விவரித்துள்ளார். இதனை தொடர்ந்து விமானத்திற்குள் கோஷமிடலாமா, 28 வயது பெண்ணுக்கு சட்ட திட்டங்கள் தெரியாது என சொல்வது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல மணி நேரத்திற்கு பிறகு, சோபியாவின் தந்தை கொலை மிரட்டல் விடுத்ததாக தம்மீது களங்கம் கூறுவது சரியா என்றும் தமிழிசை சவுந்ததரராஜன் வினவியுள்ளார். தாம் ஒரு பெண் தலைவர் என்பதால், சமூக வலைத்தளங்கள் மற்றும் நேரில் தவறாக சித்தரிப்பதும், அதனை அரசியல் கட்சித்தலைவர்கள் ஆதரிப்பதும் சரியானது அல்ல என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். கடுமையான விமர்சனைகளை எதிர்கொள்ளும் தம்மிடம், பொறுமை வேண்டும் என ஆலோசனை சொல்வது வேடிக்கை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்