கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்

காவிரி நீர்வரத்து குறைந்ததால் கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-04 10:05 GMT
* முக்கொம்பு மேலணையில் மதகு உடைந்ததால், கடைமடை பகுதியான திருக்குவளை, கீழ்வேளூர், மீனம்பல்லூர் உள்ளிட்ட பகுதிக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. 

* போதிய தண்ணீர் இல்லாததால் 25 நாள் முதல் 30 நாட்களான சம்பா பயிர்கள் மஞ்சள் பூத்து சூரை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதற்கட்ட பருவத்தை தொடங்கிய பயிர்களை காப்பாற்ற, டேங்கர் லாரிகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். 

* இன்னும் 7 தினங்களுக்குள் தண்ணீர் வரவில்லை என்றால் நெல் நாற்றுகள் காய்ந்து விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தங்கள் நலனை கருத்தில் கொண்டு, முக்கொம்பு மேலணை மதகு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்