கனிஷ்க் கோல்டுக்கு ரூ.820 கோடி கடன் கொடுத்த வழக்கு : அமலாக்கப் பிரிவிடம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

கனிஷ்க் கோல்டுக்கு 820 கோடி ரூபாய் கடன் கொடுத்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அமலாக்கப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-04 05:49 GMT
கனிஷ்க் கோல்ட் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கத்திற்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அமலாக்க பிரிவு சார்பில், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடன் வழங்கும் முன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதா ?, மொத்தமாக எவ்வளவு கடன் வழங்கப்பட்டது ? என அடுக்கடுக்கான கேள்விகளை வங்கி தரப்பிடம் நீதிபதி எழுப்பினார்.  

பின்னர் இந்த வழக்கில் வங்கி அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்ட விசாரணை விவரங்களை வருகிற 17ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்