பாலில் விஷம் கலந்து கொடுத்து பெற்ற குழந்தைகளை கொன்ற தாய்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 11:53 AM
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜய் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டுக்கு சென்ற விஜய் கதவை திறந்து பார்த்தபோது வாயில் நுரைதள்ளியடி தனது 2 குழந்தைகள் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் விஜய் மனைவி அபிராமிக்கு, பிரியாணி கடையில் வேலை செய்யும்  நபருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து தலைமறைவான தாயை தேடும் பணியை அவர்கள் தீவிரப்படுத்தினர். கள்ளக் காதலன் சுந்தரத்தை முதலில் கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்பேரில் நாகர்கோவிலில் இருந்த அபிராமியை மடக்கி பிடித்தனர்.