பல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள் -கலந்தாய்வுக்கு 100 பேர் கூட வராததால் அதிர்ச்சி

அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைக்க கல்லூரிகள் முடிவு

Update: 2018-08-31 11:33 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகளில் பல் மருத்துவ படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைக்க கல்லூரி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன..

* தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 680 பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று துவங்கியது. 

* இதற்காக 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டதில், 100 பேர் கூட வராததை அறிந்து, கல்லூரி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. பகல் 1 மணி வரை , 6 மாணவர்கள் மட்டுமே சீட்டுகளை தேர்வு எடுத்தனர்.

* நாளை நடக்கும் கலந்தாய்வுக்கும் 10 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாளையும் மாணவர்கள் வரமாட்டார்கள் என கருதுவதால், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

* தனியார் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் 6 லட்ச ரூபாய் என்பதும் ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. எனவே  கட்டணத்தை, 2 லட்சத்து 50 ஆயிரமாக குறைக்க சில கல்லூரிகள் முன் வந்துள்ளன.

* இது குறித்த விளம்பரங்களும் வெளியானபடி இருப்பதால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அடுத்த கட்டமாக நடக்க உள்ள கலந்தாய்வில், ஓரளவு இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது... 

Tags:    

மேலும் செய்திகள்